#BIG BUDGET BREAKING : 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது..!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்வு.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என அறிவிப்பு
புதிய வருமான வரி முறையில் 12 லட்சம் வரை வருமான வரி இல்லை என அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வருமான வரிக்கான புதிய வரி முறைப்படி ₹12 லட்சம் வரை வரி செலுத்தத் தேவையில்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுவரை ₹7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம் என்று இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பழைய வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால், வருமான வரி கிடையாது. இதன் மூலம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.