1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு..!

11

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் 1-ந்தேதி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like