#BIG BREAKING : ஒரு நாடு ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
மக்களவைத் தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாள்களை எட்டியுள்ளது.
இந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இந்த 100 நாள்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி, தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன.
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் அதிபர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.
இந்நிலையில் ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது
மேலும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யத் திட்டம் மசோதா நிறைவேறினால், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்
இந்த ஆட்சி காலத்துக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அறிமுகம் செய்து, 2029 தேர்தலில் நடப்புக்குக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.