#BIG BREAKING : ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திருப்பம்.. இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் போலீஸ் விசாரணை..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் புதுப்போட்டையில் இருக்கும் காவலர் குடியிருப்பு வளாகத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியுடன் நெல்சன் மனைவி மோனிஷா தொலைபேசியில் பலமுறை பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மொட்டை கிருஷ்ணனின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் மோனிஷா பேசியது தெரியவந்துள்ளதை அடுத்து, எதற்காக அவர் பேசினார் என்கிற அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நாட்களாக ரவுடி ராதாகிருஷ்ணன் தலைமுறைவாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மோனிஷா, அடைக்கலம் ஏதும் கொடுத்தாரா? அவர் தலைமறைவாக இருப்பதற்கு ஏதேனும் உதவி செய்தாரா? என்கிற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.