1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : பிரபல தமிழ் நடிகையின் சகோதரர் விபத்தில் காலமானார்..!

Q

நடிகை ஷனம் ஷெட்டி தனது சமூக வலைதள பக்கங்களில், "என் தம்பி ராகுல் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இது என் பெற்றோரும் நானும் ஒருபோதும் மீள முடியாத இழப்பு! நீங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருபோதும் விடை கொடுக்க முடியாது. விரைவில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா அழகிப் போட்டியில் டைட்டில் வென்ற நடிகை சனம் ஷெட்டி மாடலும், நடிகையும் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அம்புலி படம் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து மாயை, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி என்று பல படங்களில் நடித்துள்ளார். 

 

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 

Q

Trending News

Latest News

You May Like