1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : முதல் வேட்பாளரை அறிவித்தார் சீமான்..!

1

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு அமைத்த கூட்டணியை வைத்தே நாடாளுமன்ற தேர்தலையும் திமுக எதிர்கொள்கிறது. அதேபோல பாஜக 11 தொகுதிகளை குறி வைத்து களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. சமீபத்தில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்திருப்பதால், அதிமுகவும் தற்போது தனியாக களத்தை எதிர்கொண்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் இப்போதுதான் கூட்டணி பற்றி பேசத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் தென் சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழ்ச்செல்வியை வேட்பாளராகவே அறிவித்துவிட்டார் சீமான். இனி அடுத்தடுத்து தேர்தல் அறிவிப்புகள் சூடுபறக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like