#BIG BREAKING : திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்றும் ரெட் அலர்ட் அறிவிப்பு..!
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது...அதே போல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும்
எனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆதலால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும் அவசியம் இல்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ரெட் அலர்ட்:
எச்சரிக்கைக்குறியீடுகளில் அபாயத்தை உணர்த்தும் குறியீடு இது. மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மட்டுமே ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்களுடைய உயிர் மற்றும் உடைமைகளை பார்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும், மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு என, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான உச்சகட்ட எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.
மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சாதனங்கள், மின்னிணைப்புக் கசிவு போன்றவற்றின் மீது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.