1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ரத்தன் டாடா காலமானார்..!

1

 டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா காலமானார்.

86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலைகொள்ள வேண்டாம். நான் சிறந்த மனநிலையுடன் உள்ளேன். எனது வயது காரணமாக மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன்” என அவர் விளக்கம் அளித்திருந்தார் தற்போது அவர் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

 

 இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே தான் ரத்தன் டாடாவின் இறப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்'' என கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like