#BIG BREAKING : மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி..!

மணிப்பூர் மாநில முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்த நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக பிரேன் சிங், சில தினங்களுக்கு முன்பு ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த 9ம் தேதி பதவி விலகினார். இந்நிலையில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.