#BIG BREAKING : பாமக - பாஜக கூட்டணி அமைத்தது..!
நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்க இருப்பதாக பாமக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். இந்த முடிவினை அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் வடிவேல் ராவணன் கூறியிருக்கிறார்.
இன்று மாலை நடைபெற்ற பாமக உயர்நிலை கூட்டத்திற்கு பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்றிரவு ஒப்பந்தம் கையெழுத்தாகி, 12 முதல் 14 தொகுதிகள் வரை பாமகவிற்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது