1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாட்டில் புதிய சட்டம் அமல்..!

Q

நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோர் மற்றும் அதில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா, மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

 

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Trending News

Latest News

You May Like