#BIG BREAKING : குமரி அனந்தன் காலமானார்..!

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
கடந்த சில தினங்ககளாக வயது மூப்பு பிரச்சினையால் அவ்வப்போது மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் காலமானார். இதனை அவரது மகளும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை உறுதி செய்துள்ளார். குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்... இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்... குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்...… pic.twitter.com/MxDWOHg5OJ
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 8, 2025