1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING :ககன்யான் மாதிரி விண்கல சோதனை திடீர் நிறுத்தம் : இஸ்ரோ அறிவிப்பு

1

3 நாடுகள் ( ரஷ்யா, அமெரிக்கா, சீனா) மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதற்காக, கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.

பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, 2 அல்லது 3 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டு பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலனை தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பி மீண்டும் அதை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும். அங்கிருந்து கலன் மீட்கப்படும்.

இந்நிலையில்ககன்யான் திட்டத்தின், மாதிரி விண்கலத்தின் முதல் கட்ட சோதனை இன்று காலை 8 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பனிமூட்டம், மேகக்கூட்டங்கள் காரணமாக முதல் கட்ட சோதனை தாமதமானது. இதனை அடுத்து விண்கலத்தின் கவுன்ட்டவுன் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ககன்யான் மாதிரி விண்கலத்தின் முதல் சோதனையை ஒத்திவைப்பதாக இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன்பு சோதனை நிறுத்தப்பட்டு வேறொரு நாளில் ககன்யான் விண்கலம் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like