1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : இசைஞானி இளையராஜா மகள் காலமானார்...!

1

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப் படத்தில் இசை அமைத்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் இளையராஜா.இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய மொழி திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். போல குடும்பமே இசை குடும்பம் தான்.பவதாரிணி, மை டியர் குட்டிச்சாத்தான் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, தேசிய விருது உற்பட பாடல்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் காலமானார். இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீரென தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பவதாரிணியின் திடீர் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like