#BIG BREAKING : நான் தான் ஜெயலலிதா மகள்... உச்ச நீதிமன்றத்தில் மனு போட்ட கேரளா பெண்...!
ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் மகள் என்று கூறி ஒரு பெண் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். திருச்சூரைச் சேர்ந்த சுனிதா, இந்த கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இது தொடர்பாக சுனிதா தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்தப் பெண் கோரியுள்ளார்.
சுனிதா என்ற அந்த பெண் தாக்கல் செய்த மனுவில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா 1980களில் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கான அடிப்படையில், அவர்களுடைய சொத்துகளில் தனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
முக்கியமாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான் பெற்றோர் என நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். அதேசமயம், ஜெயலலிதாவின் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகள் தனது உரிமையை மறுக்கும் விதமாக உள்ளதாகவும் சுஜி கூறியுள்ளார்.அதற்கு ஆதாரமாக தான் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக வைக்கவும் தயார் என்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மிக விரிவான விவரங்களைக் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் வெளியானதும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா ரசிகர்கள் அதனை கடுமையாக எதிர்த்து – “இது திட்டமிட்ட கருப்பு பிரசாரம்” என கூறுகின்றனர்.