#BIG BREAKING : 4 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 4-ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள், ஐடி, நிதி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.