#BIG BREAKING : முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை..!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், பிரதமராக இருந்தபோது அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
ஏற்கெனவே பரிசுப் பொருள் வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அரசின் ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் துணைத் தலைவர் குரேஷிக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசின் ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் 5 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கெனவே பரிசுப் பொருட்கள் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.