1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ஜப்பானில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. சுனாமி வார்னிங்..!

1

ஜப்பான் நாட்டின் பல ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில்
ஜப்பானின் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை நேரத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜப்பானின் தெற்கு தீவு பகுதியிலுள்ள கியூசு என்ற பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற பதிவானதாகவும் இரண்டாவது ஆக நிகழ்ந்த நிலநடுக்கம் 7.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் இயற்கை பேரிடர் கண்காணிப்பு குழு கூறுகையில், ஜப்பானில் இன்று காலையில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது, அதாவது ரிக்டர் அளவுபடி இது சுனாமி உருவாகும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவீடு ஆகும். இதற்கு இடையே ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதிகளில் சுமார் 1 மீட்டருக்கும் மேல் உயரமான அலைகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷ் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like