#BIG BREAKING: பூகம்பம் : தாய்லாந்தில் பல மாடி புதிய கட்டடம் இடிந்தது..!
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்பட்ட நிலநடுத்தால் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்னாமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் கட்டப்பட்டுவரும் 30 தளக் கட்டடம் இடிந்து விழுந்தது. குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அங்கு வேலை செய்த ஊழியர்கள் பலர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தாய்லாந்தின் தேசிய அவசர சிகிச்சைக் கழகம் (National Institute of Emergency Medicine) தெரிவித்தது.
அரசாங்க அலுவலகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்டு வந்த அக்கட்டடம் தரைமட்டமானதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் காயமுற்றிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பாங் சியூ மாவட்டத்தின் இணை காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
மியன்மாரின் பல்வேறு பகுதிகளிலும் பேங்காக்கிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் ராணுவ அரசாங்கம், மனிதாபிமான உதவிக்குப் பிற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் சியாங்மாய், வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி, ஹனோய் ஆகிய நகரங்களிலும் மோசமான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகப் பலர் தெரிவித்தனர்.
மியன்மார் தலைநகர் நேப்பிடோவின் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன; கட்டடங்கள் சேதமடைந்தன.
மியன்மாரில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அந்நாட்டின் சகாயிங் நகரின் வடமேற்குப் பகுதியை உலுக்கியது என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியை 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உலுக்கியது.
தென்மேற்குச் சீனாவில் உள்ள யூனான் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பெய்ஜிங் நிலநடுக்க அமைப்பு தெரிவித்தது. 7.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அமைப்பு சொன்னது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. மியன்மாரின் மண்டலே நகரில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வடதாய்லாந்திலிருந்து அந்நாட்டின் தலைநகர் பேங்காக் வரை மோசமான நில அதிர்வுகள் உணரப்பட்டன. தாய்லாந்தில் பலர் கட்டடங்களிலிருந்து உடனடியாக வெளியேறினர்.
பேங்காக்கில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. நகரின் சில ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள புக்கெட் தீவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டுப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத், நிலநடுக்கத்துக்குப் பிறகு தமது பணிகளை நிறுத்திவிட்டு உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டதாக எக்ஸ் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.