1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : 47-வது அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்..!

1

2024-ல் அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி, நடைப்பெற்ற சூழலில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. முன்னதாக அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று (நவம்பர் 5) அமெரிக்க நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து இந்திய நேரப்படி இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் காலை நிலவரப்படி, 247 இடங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் 214 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.

இந்நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். 277 எலக்டோரல் வாக்குகள் பெற்று 47வது அதிபராக அவர் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் அதிகாரப்பூர்வமாக வெற்று பெற்றுள்ளதாக ஃபாக்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சுமார் 51 சதவிகித வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அதே போல் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 226 எலக்டோரல் வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.



 

Trending News

Latest News

You May Like