1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்..!

1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது.

இந்நிலையில் தீவிர சிகிகிச்சை பிரிவில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். 

அண்மையில் அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீதாராம் யெச்சூரி, கடந்த மாதம் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைய அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Trending News

Latest News

You May Like