#BIG BREAKING : மண்ணுக்குள் மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு அரசு மரியாதையுடன், துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் விண்ணுலகை விட்டு மண்ணுலகில் புதைந்தது. விஜயகாந்த் மனைவி, மகன்கள் நொறுங்கிய இதயத்தோடு அவருக்கு விடை கொடுத்தனர்.
மதுரையில் புறப்பட்ட இந்த தங்கம் இறுதியாக வைரமாக மாறி கோயம்பேட்டில் தன் அலுவலகத்தில் மண்ணில் புதைந்தது. "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப தமிழகத்தின் மூச்சுக்காற்றில் விஜயகாந்தின் சுவாசமும் கலந்தே இருக்கும்.
மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்கள் மனதில் அவரது புகழ் நீங்க இடம் பிடித்திருக்கும்.