#BIG BREAKING :திரும்பப் பெற்றது..! இனி ஐசிஐசிஐ வங்கியில் ரூ.50000 மினிமம் பேலன்ஸ் தேவையில்லை..!
இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், வங்கிகளின் விதிமுறைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயம் செய்கின்றன. அந்தவகையில், ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது..
ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புறங்களில் புதிதாக கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று திடீரென அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது,.
கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் 10000 ரூபாய்க்குப் பதிலாக 50000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் அல்லது மாதத்தில் ஒரு நாள் 15 லட்சம் ரூபாயை இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது..
பெருநகர மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.50,000 இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும் என்ற தேவையை ஐசிஐசிஐ வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி புதிய அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்கள் முறையே ரூ.25,000 மற்றும் ரூ.10,000 குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் என்ற தேவையை திரும்பப் பெற்றுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் இப்போது முறையே ரூ.7,500 மற்றும் ரூ.2,500 குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டும். வார இறுதியில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர அடிப்படைத் தேவைகளை ரூ.10,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியதற்காக, தனியார் துறை வங்கி வாடிக்கையாளர் மற்றும் தொழில்துறையினரின் எதிர்ப்பைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தத் திருத்தங்கள் வந்துள்ளன.