#BIG BREAKING : ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு ..!
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூன்று தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால் தற்போது ஏற்க்குறைய 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் சாய்ரா. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாக்கியுது என்றும் கூறப்படுகிறது.