#BIG BREAKING : 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரும் விடுதலை..!
மும்பை புறநகர் ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஆர்டிஎக்ஸ் ரக குண்டுகள் வெடித்ததில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயம் அடைந்தனர்.மும்பையை அதிரவைத்த இந்த பயங்கர சம்பவம் 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது.
மாதுங்கா ரோடு, மாஹிம், பாந்த்ரா, கர் ரோடு, ஜோகேஷ்வரி, போரிவிலி, மீரா ரோடு ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நேரத்தில் மாலை 6.23 மணிக்கு தொடங்கி 10 நிமிட இடைவெளியில் 7 ரயில்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
8 ஆண்டு நீடித்த விசாரணையில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 டாக்டர்கள் உட்பட 192 சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் 51 சாட்சிகளிடம் குறுக்குவிசாரணை நடத்தினார். சாட்சிகள் கொடுத்த வாக்குமூலம் சுமார் 5,500 பக்கங்கள் இருந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு 12 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015ம் தீர்ப்பு அளித்தது இந்த நிலையில், குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை
விசாரணையில், நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, "நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கை நிறுவுவதில் அரசு தரப்பு முற்றிலும் தோல்வியடைந்தது" என்று கூறியது. பெரும்பாலான அரசு தரப்பு சாட்சிகளை நம்பமுடியாதவர்கள் என்று நீதிமன்றம் கண்டறிந்தது, டாக்சி ஓட்டுநர்கள் அல்லது பயணிகள் கிட்டத்தட்ட 100 நாட்களுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவரை நினைவில் வைத்திருக்க எந்த காரணமும் இல்லை என்று கூறியது. பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு வகையை அரசு தரப்பு அடையாளம் காணத் தவறியதால், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வரைபடங்கள் போன்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையும் முக்கியமற்றது என்று பெஞ்ச் நிராகரித்தது.
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்கிறது.