1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் கைது..!

1

 கடந்த வாரம் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் பிரீமியர் காட்சி ஒரு நாள் முன்னதாக நடைபெற்றது. அப்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அல்லு அர்ஜுன்.

மரணம் அடைந்த பெண்ணிற்கு அல்லு அர்ஜுன் சார்பாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் அல்லு அர்ஜுன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரிடம் விசாரணை செய்ய சிக்கிடப்பள்ளி  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  


 

Trending News

Latest News

You May Like