#BIG BREAKING: நாடு முழுவுதும் இன்று நள்ளிரவு முதல்...

நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த சட்டம் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.