#BIG BREAKING: விசிகவில் இருந்து ஆதவ் ஆர்ஜுனா விலகல்..!
திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம், உதயநிதி ஸ்டாலின் குறித்த விமர்சனம் உள்ளிட்டவை ஆதவ் அர்ஜுனா மீது கவனத்தை திருப்பியது. சர்ச்சையாகவும் வெடித்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அம்பேத்கர் தொடர்பான புத்தகம் ஒன்றை தனது நிறுவனத்தின் மூலம் உருவாக்கி அதை பிரம்மாண்ட விழா மூலம் வெளியிட திட்டமிட்டார். அதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புறக்கணிப்பு என இரண்டு விஷயங்கள் பேசுபொருளாக மாறின. அடுத்தடுத்த நிகழ்வுகள் திருமாவளவனுக்கு நெருக்கடியாக மாற, உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுக்க ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக விலகுவதாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று மடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.