#BIG BREAKING : தமிழ்நாட்டை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை..!

2016 முதல் 2018 வரை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ பதிவு செய்து பணம்பறிப்பு மற்றும் மிரட்டல் செய்து வந்தது. இந்த சம்பவம் 2019ல் பாதிக்கப்பட்ட ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து வெளிவந்தது.
இந்த வழக்கில் இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு,வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் இவர்கள் சிலரிடம் இருந்த செல்போன் மற்றும் லப்டாப் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டது. 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. விசாரணை 2025 மார்ச் மாதத்தில் நிறைவு பெற்றது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்கிற தீர்ப்பை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி வழங்கினார்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கவேண்டும் என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எதிர்தரப்பு சார்பில், குற்றவாளிகளின் இளம் வயது, திருமணம் ஆகாதவர்கள், பெற்றோர்கள் வயதானவர்கள் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு எதிர்தரப்பின் வேண்டுகோள்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது என கருதப்பட்ட நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.