1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்..!

Q

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிஎம்எல்ஏ வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மற்றும் வழக்கு விசாரணையில் தாமதம் தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ், மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
செந்தில்பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர்.
அமலாக்கத் துறையின் தரப்பில் துஷார் மேத்தா, வழக்குரைஞர் ஹெப் ஹுசேன், இடையீட்டு மனுதாரர் ஒய்.பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அஹ்ஸனுதின் அமானுல்லா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை (இன்று) பட்டியலிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நீதிபதி அபய் எஸ்.ஓகா அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான அவர், கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். பலமுறை அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், SC இன்று அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. ஜாமின் வழங்கப்பட்டதையொட்டி கரூர் உள்ளிட்ட இடங்களில் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like