1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING: பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..!

Q

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார்.

9 நாள் ஆய்வுக்குப் பிறகு பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர் பூமி திரும்ப முடியவில்லை. பல முயற்சிகள் பலனளிக்காத நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்டார் லைனர் மட்டுமே பூமிக்கு திரும்பியது.

தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ். புட்ச் வில்மோர், ரஷ்யாவின் அலக்சாண்டர் உள்ளிட்ட ஏழு பேர் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் 286 நாட்கள் விண்வெளியில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன் வந்தது. தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது.

அதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற நிலையில் நேற்று முன்தினம் அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது. தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று காலை 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது. அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தயாரானதும் நாசா திட்டமிட்டபடி 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரித்தது. தொடர்ந்து சுமார் 17 மணிநேர பயணத்தை தொடர்ந்து நிலையில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு பூமியை வந்தடைந்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம்.

Trending News

Latest News

You May Like

News Hub