#BIG BREAKING : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..!
காஞ்சிபுரத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது, அதில் ஒன்றாக சாம்சங் தொழிற்சாலை உள்ள நிலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பிரிட்ஜ், டிவி, வாசிங் மிஷின் மற்றும் ஏசி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கிய அறிமுக கடிதத்தை சாம்சங் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் எந்த ஒரு பதிலும் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் ஊழியர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிஐடியு கோரிக்கைகள் குறித்து தென்கொரியாவில் உள்ள தலைமையிடத்தில் பேசி அதற்கு பிறகு பதில் அளிப்பதாகவும் தெரிவித்தனர்..
இந்நிலையில், அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இன்று தங்கள் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர். தொழிலாளர்கள் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டியதுவேலைக்கு திரும்பும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என சாம்சங் நிறுவனத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.