#BIG BREAKING: ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொழில் குழுமம் என்றால் அது டாடா சன்ஸ் தான். சம காலத்திற்கு ஏற்ற வகையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் ரத்தன் டாடாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.
பெரிய பெரிய நிறுவனங்களுடன் மட்டும் டீல் போடாமல், சிறு நிறுவனங்களையும் கூட வளர்த்து விடுவதே ரத்தன் டாடாவின் ஸ்டைல். இன்று இந்தியாவில் மிக முக்கிய ஐடி நிறுவனமாக உள்ள இன்போசிஸ் உருவாக டாடாவின் உதவி முக்கியமானது.
இப்போதும் கூட அவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடையாளம் கண்டு தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகிறார். அப்படி தான் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அப்ஸ்டாக்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். 2016இல் அவர் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தில் சுமார் 1.33% பங்குகளை வாங்கி இருந்தார். இந்த முதலீட்டில் தான் அவருக்கு 23000% லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரத்தன் டாடா (86) இன்று (அக். 7) அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்தன் டாடா இன்று நள்ளிரவு 12.30 - 1 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, அவரது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.