1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு..!

1

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (பாதுகாவலர்கள்), ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்மேன், மினிஸ்டரியல் ஊழியர்கள் மற்றும் பிற குரூப் எக்ஸ்சி ஊழியர்கள் போன்ற பல்வேறு வகை ரெயில்வே ஊழியர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like