#BIG BREAKING:- ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் -பிரதமர் மோடி..!

சோலார் பேனல்கள் பொருத்தி மின்சக்தியை தயாரித்து பயன்படுத்துவது என்பது மின்சாரத்திற்கு ஆகும் செலவை வெகுவாக குறைக்கிறது. மேலும் இவ்வாறு சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம் நமது தேவைக்கேற்ப நாம் மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்நிலையில், நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அயோத்தியில் இருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுவாகும். சூரிய ஒளி மின்சக்தியை நிறுவ "பிரதமர் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டம் தொடங்கப்படும். இதனால், ஏழை, நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறையும்; எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் என்றார்.