1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : டாக்காவில் உள்ள பள்ளி பள்ளியில் விழுந்து நொறுங்கிய விமானம் - ஒருவர் பலி..!

1

டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22) மதியம் 1:30 மணியளவில் பங்களாதேஷ் விமானப்படையின் F7 விமானம் மோதியுள்ளது. 

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளியின் மீது அந்நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. 


விபத்தின்போது பள்ளியில் நூற்றக்கணக்கான மாணவர்கள் இருந்ததால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.விபத்தில் பல மாணவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


 

Trending News

Latest News

You May Like