#BIG BREAKING : சாகும் வரை தூக்கிலிட வேண்டும்..!
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யபிரியாவை எலக்ட்ரிக் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்ற இளைஞருக்கு, சென்னை சிறப்பு மகளிர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 ஆண்டுகள் தண்டனை நிறைவேறிய பிறகு, அவரை கொலை வழக்கில் சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சத்யபிரியா கொல்லப்பட்ட செய்தியை அறிந்த அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார், மேலும் நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரும் இரு தினங்களில் உயிரிழந்தார்.
ஒரு குடும்பத்தையே ஆட்டி படைத்த அந்த கொலை வழக்கில் காரணமாக இருந்த சதீஷை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விவரங்கள்
போலீசார் விசாரணையில், சத்யபிரியாவும், சதீஷும் காதலித்து வந்ததாகவும், ஆனால் சதீஷின் நடவடிக்கை பிடிக்காமல் சத்யா பிரியா ஒதுங்க ஆரம்பித்ததால் வெறுப்பான சதிஷ், அவரை கொலை செய்ததாகவும் தெரியவந்தது.
இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையில், சதீஷ் குற்றவாளி என மகளிர் நீதிமன்றம் தீர்மானித்தது.
இன்று,கோர்ட், சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கியுள்ளதுடன், மாணவியை தொடர்ந்து தொல்லை கொடுத்ததற்காக, அவன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்தது.
இந்த அபராதத்தில், 25,000 ரூபாய் பாதிக்கப்பட்டவரின் சகோதரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், 15,000 ரூபாய்-ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.