1. Home
  2. தமிழ்நாடு

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி!


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளாதல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கொரோனா இல்லை என்றால் பிக்பாஸ் சீசன் ஜூன் மாதமே தொடங்கி இருக்கும். ஆனால் கொரோனாவால் தடைபட்டது பிக்பாஸ்.

சமீபத்தில் தமிழக அரசு விதிமுறைகளுடன் சின்னத்திரை படபிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதால் பிக்பாஸ் 4 ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வரும் அக்டோபர் 4 முதல் என்று கமல் பேசும் வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.


அக்டோபர் 4 ஆம் தேதி மட்டும் 6 மணிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டு, அடுத்த நாளான திங்கள் கிழமையிலிருந்து இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் இல்ல நடவடிக்கைகள் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.இதனால், பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like