1. Home
  2. தமிழ்நாடு

பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சியாக பார்க்கப்பட்ட ஜூலி அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற நற்பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில ஜூலி இழந்துவிட்டார். அதன்பிறகு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார் ஜூலி. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அம்மன் தாயி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பொதுமுடக்கம் என்பதால் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூலி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில் ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் உரிமையாளரை அவர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in

Trending News

Latest News

You May Like