ரூ.5,000க்கு மதிய உணவு சாப்பிட்ட பிக்பாஸ் பிரபலம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

மதிய உணவுக்காக ரூ.5,000 செலவு செய்த மாடலும், பிக்பாஸ் பிரபலமுமான சம்யுக்தாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரும், பிரபல மாடலுமான சம்யுக்தா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் மதிய உணவுக்காக ரூ. 5000 அவர் செலவு செய்ததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
லாக்டவுனில் யூடியூப்பில் சொந்தமாக சேனல் தொடங்கிய அவர் அதில் குக்கிங், மேக்கப், டிராவல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஃபுட் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த சம்யுக்தா, அண்மையில் திருவனந்தபுரத்தில் இருக்கும் உலக புகழ்பெற்ற, பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு மதிய உணவு உண்ண சென்றார். அந்த ஹோட்டல் தான் அவருடைய ஃபேவரெட் ஹோட்டல்.
அந்த ஹோட்டலை சுற்றி காட்டியப்படி அவர் அங்கு இருக்கும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதை ஒருபக்கம் வீடியோவாகவும் ஷூட் செய்து கொண்டிருந்தார். எல்லா உணவுகளையும் ருசி பார்த்த பின்பு அதற்கான பில் ரூ. 5000 என காட்டினார்.
அதுதான் சர்ச்சைக்கு காரணமாகவிட்டது. ஒருவேளை உணவுக்கு ரூ. 5000 செலவு செய்வது எல்லாம் ஓவர் என்று அந்த வீடியோவுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரம் சம்யுக்தாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
newstm.in