1. Home
  2. தமிழ்நாடு

கலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்..!

1

காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க அதிபர்  பைடன் அறிவித்து உள்ளார். 

மேலும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மாகாணம், பழங்குடியின பகுதிகள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் மீட்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான அரசின் உதவியை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால், தற்காலிக வீட்டுக்கான மானியம் மற்றும் வீட்டை பழுது பார்ப்பது உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும். பேரிடரில் இருந்து தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீண்டு வருவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து காட்டுத்தீயானது 15 ஆயிரம் ஏக்கர் வன பகுதிகள் வரை பரவி வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ஏக்கர் பகுதிகள் எரிந்து விட்டன. ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட  காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.   காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like