குன்றத்தூர் அபிராமியாக மாறிய பவானி..! பிரியாணி மாஸ்டருக்காக கணவனை கொல்ல சதி..!
திருமணத்தை மீறிய உறவால், தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொன்ற குன்றத்தூர் அபிராமி பற்றி நாம் அறிந்திருப்போம். அதே போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (47). இவரது மனைவி பவானி (38). இருவரும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளனர். இந்த கடையில் திருவாரூரை சேர்ந்த மதன்ராஜ் (36) என்பவர் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், பிரியாணி மாஸ்டர் மதன்ராஜ்க்கும் பவானிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன் ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். மேலும் கணவன் மற்றும் குடும்பத்தினர் பவானியை கண்டித்துள்ளனர்.
கணவன் அறிவுரை கூறியும் திருந்தாத மனைவி இருவருக்கும் இடையே பழக்கம் தொடர்ந்து வந்தது. அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் கள்ள காதலுக்கு இடையூறாக உள்ள ஹரி கிருஷ்ணனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.காவல்துறை நடத்திய விசாரணையில், காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய கள்ளக்காதலன் மதன் கூலிப்படையை ஏவி ரூ.15 லட்சம் பேசி கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்ட ஹரி கிருஷ்ணன் தப்பி ஸ்ரீபெரும்புதூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் மனைவி பவானியை நேற்று கைது செய்த நிலையில், இன்று கள்ளக்காதலன் மதன் மற்றும் கூலிப்படைகள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், விஜய், விக்னேஷ் ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.