1. Home
  2. தமிழ்நாடு

நாளை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது பவதாரணி உடல்..!

1

 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி.பாரதி பாடத்தில் மயில் போல பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றிருந்தார். இராமன் அத்துல்லா படத்தில் என் வீட்டுச் சன்னல் என்ற பாடலையும் தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை உள்ளிட்ட பாடல்களையும் பவாதாரிணி பாடியுள்ளார்.

‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

கடந்த 5 மாதங்களாகவே சிகிச்சை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பவாதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பவதாரிணி காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like