நாளை ஓடிடியில் வெளியாகிறது பரத், வாணி போஜன் நடித்த "லவ்" திரைப்படம்..!

பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ். மலையாள படத்தின் ரீமேக் திரைப்படமான இந்தப் படத்தை ஆர் பி பாலா இயக்கியுள்ளார். இதில் பரத் மற்றும் வாணி போஜன் உடன் இணைந்து ஸ்வயம் சித்தா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஆர் பி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முத்தையா ஒளிப்பதிலும் ரோனி ரபேல் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது. பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இப்படம் நாளை (செப்டம்பர் 8) ஆஹா தமிழ் என்ற ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Bringing an unforgettable tale of love and suspense to life in 6 hours! 🙌🏽
— aha Tamil (@ahatamil) September 7, 2023
6️⃣ Hours to go for #Love🩸❤#LOVEMovieonAhaTamil@bharathhere @rpbala2012 @vanibhojanoffl@RonnieRaphael01 @RPFilmsOfficial@MuthaiahG @actorvivekpra @Danielanniepope@iantoprasanth#LoveonAha pic.twitter.com/xRJqcS655r