இன்று பாரத் பந்த்: நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்..!
பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில், அதே சமுகத்தை சோ்ந்த மிகவும் பின்தங்கிய பிரிவுகளுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தொிவித்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 21 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை பச்சோ சங்கா்ஸ் சமிதி அறிவித்துள்ளது. பாரத் பந்த் என்று அழைக்கப்படும் நாடு தழுவிய போராட்டத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
அதேபோல் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த பட்டியலின சங்கங்கள் ஆதரவு வழங்கி உள்ளன. உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீட்டு தீர்ப்புக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போராட்டம் பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநில எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் போலீஸ் உயா் அதிகாரிகள் சார்பில் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே போராட்டங்கள் நடைபெறும் மாநிலங்களில் பொதுபோக்குவரத்து சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மருத்துவமனைகள், மெடிக்கல், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கடைகள், வணிக வளாகங்கள், அத்தியாசிய பொருட்கள் விற்பனை கடைகள் தவிற மற்றவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.