மக்களே உஷார்..! தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: இன்று (நவ.10 )தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நவ.11 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.12 ஆம் தேதி முதல் நவ.14 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ15 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் வியாழக்கிழமை காலை முதலே பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் துவங்கிய மழை விட்டுவிட்டு பெய்ததால், பள்ளி கல்லூரி சென்ற மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். பகல் நேரத்திலும், மாலை நேரத்திலும் சென்னை மழை வெளுத்து வாங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, அண்ணா சாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல், புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்தது.