மக்களே உஷார்..! செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு..!
சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.பல இடங்களில் பெய்துவரும் மழைநீர், அடையாற்றில் கலப்பதால் அடையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், மழையால் நேமம் ஏரி, பிள்ளைப்பாகம் ஏரி நிரம்பியதால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து 10,000 கனஅடியை எட்டிய நிலையில், நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4000 கன அடியாக அதிகரிப்பு