1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை..!

1

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப்போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குற்றங்களைத் தடுக்க போலீஸார் தீவிர ரோந்து செல்ல உள்ளனர்.  தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் எஸ்.ஐ தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இது போல் தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like