1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! அடிச்சு கொட்டபோகுது கனமழை... 100 மி.மீ ருக்கு குறையாமல் மழை பெய்யும்..!

1

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை இன்று இரவு முதல் நாளை மாலை வரை பெய்யக் கூடும்.

'கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மிக கனமழை பெய்யும் என பெய்யும்.

விருதுநகர் மாவட்டம் மற்றும் நெல்லை, மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும். சராசரியாக 15 சென்டிமீட்டர் அளவில் மிக கனமழையின் போது 25 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்' என தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று வானிலை மிகவும் அருமையாக இருந்தது. எனவே மேற்கொண்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். இந்த மாவட்டங்களில் 75 மி.மீ. முதல் 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில் 150 முதல் 250 மி.மீ அளவுக்கு அதீத மழைக்கும் வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்களான விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், ராணிப்பேட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், பாண்டிச்சேரியிலும் இன்று இரவு முதல் நாளை மாலை வரை மழை பெய்யும். ஆனால் மிக்ஜாம் புயலில் ஏற்பட்டது போல் வெள்ளம் வராது, அஞ்ச வேண்டாம்.

மேகக் கூட்டங்களை பார்த்தால் 100 மி.மீ ருக்கு குறையாமல் மழை பெய்யும் . அல்லது 200 மி.மீ மழை அளவைக் கூட தொடும். ஜனவரியில் மழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை என்பது மிகவும் அரிதாகும். ஆனால் இந்த முறை பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தாலும் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like