1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி ஆபாசமாகப் பேசினால், பாடினால் சிறை..!

11

சென்னை காவல் துறை எவிடுத்துள்ள செய்தி குறிப்பில், பொதுவெளியில் ஆபாசமாக பேசினாலோ, பாடினாலோ மூன்று மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் என காவல் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இத்தகைய குற்றத்திற்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள காவல் துறை, பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்வது அனைவரின் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட என்று தெரிவித்துள்ளது.

“நாம் சாதாரணமானவை என்று நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கக் கூடும். எனவே மிகுந்த கவனம் தேவை,” என காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்னை காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், பாட்டு போட்டா தப்பா.? என்ற தலைப்பில் பொதுவெளியில் அருவருக்கதக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது ஒலிக்கச்செய்வது, தகாத வார்த்தைகள் பேசுவது மற்றும் ஒழுங்கீனமான எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அல்லது இரண்டை தண்டனையும் சேர்ந்து விதிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட. நீங்கள் சாதாரணமாக நினைக்கும் செயல்களும் கூட தண்டனைக்குரியவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 


 


 

Trending News

Latest News

You May Like